அமெரிக்காவில் படிக்கும் இலங்கை சிறுவன் ஊருக்கு வந்தபோது குண்டுவெடிப்பில் உயிரிழப்பு... வெளியான புகைப்படங்கள் மற்றும் விபரங்கள்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் படித்து வரும் இலங்கையை சேர்ந்த சிறுவன் குண்டுவெடிப்பில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்ததுடன் 500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குறைந்தபட்சம் அமெரிக்கவை சேர்ந்த 4 பேர் குண்டுவெடிப்பில் இறந்திருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இதில் ஒருவர் தான் கிரன் சப்ரிட்ஸ் ஜோய்சா என்பவர்.

இலங்கையை சேர்ந்த ஜோய்சா அமெரிக்காவில் உள்ள Sidwell Friends பள்ளிக்கூடத்தில் fifth grade படித்து வந்தார்.

அந்த பள்ளிக்கூடத்தில் தான் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாவின் இரண்டு மகள்களான சாஷா, மலியா மற்றும் பில் கிளிண்டனின் மகள் செல்சியா ஆகியோர் படித்தனர்.

ஜோய்சாவுக்கு 10 வயது இருக்கலாம் என கருதப்படுகிறது. இலங்கையில் ஜோய்சாவின் குடும்பம் இருக்கலாம் என கருதப்படும் நிலையில் அங்கு வந்த அவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் Sidwell Friends பள்ளிக்கூடம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜோசாவின் மறைவு அவரது குடும்பத்துக்கும், நமது சமூகத்துக்கும் எதிர்பாராத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கல்வி கற்பதில் மிக ஆர்வமாக இருந்தார் என கூறப்பட்டுள்ளது.

கடல் சூழ்ந்த இலங்கை இன்று கண்ணீரில் - அஞ்சலி கவிதை

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்