இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த அமெரிக்கர்..வெளியான புகைப்படம் மற்றும் விவரங்கள்

Report Print Santhan in அமெரிக்கா

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தற்போது வரை 297 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதில் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டென்வர் பகுதியைச் சேர்ந்த Dieter Kowalski என்ற நபர் ஞாயிற்று கிழமை காலை சரியாக 3.30 மணிக்கு வந்துள்ளார்.

தொழில் தொடர்பாக இலங்கை வந்த இவர், கொழும்புவில் இருக்கும் Cinnamon Grand ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அங்கு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் Dieter Kowalski பலியாகியுள்ளார்.

இதை அவரின் சகோதரர் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கையில் நடந்த வெடி குண்டு சம்பவத்தில் இறந்தவர்களில் Dieter Kowalski-யும் ஒருவர் என்றும் இதை உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்