இலங்கையில் 138 மில்லியன் பேர் பலி? மக்களை அதிர்ச்சியடைய செய்த டொனால்ட் டிரம்பின் பதிவு

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து தவறாக பதிவிட்டு கேலிக்கு ஆளாகியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.

இலங்கையில், தேவாலயங்களிலும், ஹொட்ட்டல்களிலும் நடந்த குண்டு வெடிப்புகளில் 138 மில்லியன் பேர் பலியானதற்கு அமெரிக்க மக்கள் சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், 138 பேர் பலி என்பதற்கு பதிலாக தவறாக 138 மில்லியன் என்று பதிவிட்டுள்ளார்.

இதனைப்பார்த்த பலரும், இது ஒரு முட்டாள்தனமான பதிவு, இலங்கையின் மக்கள்தொகையை விட நீங்கள் அதிகமான எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளீர்கள் என்று கிண்டல் செய்ததையடுத்து உடடினயாக தனது தவறை மாற்றிக்கொண்டார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்