தம்பியுடன் மனைவிக்கு தொடர்பு ? கணவன் செய்த வெறிச்செயல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது சொந்த தம்பியுடன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட கணவனின் கோபம் நான்கு பேரின் உயிரைப் பறித்தது.

பீனிக்சைச் சேர்ந்த Austin Smithக்கு (30) தனது மனைவிக்கும் தனது தம்பிக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மதுபான விடுதிக்கு சென்று குடித்து விட்டு வீடு திரும்பிய Austin, தனது மனைவி Dasiaவிடம் நீ எனக்கு துரோகம் செய்கிறாயா என்று கேட்டு சண்டையிட்டிருக்கிறார்.

Dasia அதை மறுக்கவே அவரை சுட்டுக் கொன்ற Austin அவரையும் தனது இரண்டு மகள்களான Nasha (5) மற்றும் Mayan (7) ஆகியோரையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்.

பின்னர் தனது தம்பியைதேடி அவரது வீட்டுக்கு சென்ற Austin அங்கு தன் தம்பி இல்லாததையடுத்து, அங்கிருந்த தனது உறவினரான Ron Freemanஐ (46) சுட்டுக் கொன்றிருக்கிறார்.

விசாரணையில் தனது மனைவி தனக்கு துரோகம் செய்வதாக தனக்கு சந்தேகம் இருந்ததால் அவரைக் கொன்றதாகவும், இரண்டு மகள்களும் தனது மனைவியின் முக சாடையில் இருந்ததால் அவர்களைக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மனைவியின் தவறான உறவுக்கு Ron Freeman உதவியாக இருந்ததால் அவரைக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார் Austin.

கைது செய்யப்பட்டுள்ள Austin சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers