லொட்டரியில் 209 மில்லியன் பவுண்டுகளை வென்ற 90 வயது பாட்டிக்கு வந்த சோதனை!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் மில்லியன் கணக்கில் லொட்டரி பரிசுத்தொகை வென்ற 90 வயதான பாட்டி, தன்னுடைய பணத்தை மகனும், முதலீட்டு ஆலோசகரும் சேர்ந்து கொள்ளையடித்துவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் 90 வயதான குளோரியா மெக்கன்சி. இவர் மே 2013ம் ஆண்டு தன்னுடைய 84 வயதில் 590 மில்லியன் டொலர் மதிப்புள்ள பாபல் டாட்டா டிக்கெட் ஒன்றினை வாங்கியிருக்கிறார்.

ஒரு மொத்த தொகையைப் பெறவும் வரிகளை கழிக்கவும் ஒப்புக்கொண்ட பிறகு, குளோரியா மெக்கென்சி வீட்டிற்கு 278 மில்லியன் டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தனது வெற்றியில் பாதிப்பணத்தை தன்னுடைய மகனுக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தில் வாழக்கையை கழிக்கவிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

அவர் அதிகம் படிக்காத காரணத்தால், நிதியை கவனிக்கும் பொறுப்பை அவருடைய மகன் ஸ்காட் மேக்கென்சியிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் ஜாக்சன்வில் உள்ள ஜோகன்ச்வில் மாநில நீதிமன்றத்தில் குளோரியா வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மகன் ஸ்காட் மற்றும் அவருடைய நிதி ஆலோசகர் குறைந்த முதலீட்டில் பணத்தை செலுத்தி ஏமாற்றிவிட்டதாக கூறியிருந்தார்.

இதனடிப்படையில் அவர்கள் இருவருக்கும் எதிராக, நம்பத்தன்மையை மீறல், ஒப்பந்தத்தை மீறுதல், அலட்சியம் செய்தல் மற்றும் வயதுவந்தோரிடம் இருந்து சுரண்டல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது.

முதலில் இந்த வழக்கினை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். அதன்பிறகு திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

வழக்கு விசாரணையில், ஹாங்க் மேடன் என்கிற நிதி ஆலோசகரை அவருடைய மகன் ஸ்காட் தான் தாயிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளான். இதனை கேள்விப்பட்ட அவருடைய மகள், அந்த நிதி ஆலோசகர் ஏற்கனவே தொழில் ரீதியான ஒழுக்கத்தை எதிர்கொண்டிருப்பதாக தன்னுடைய தாயிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் அவருடைய சகோதரன் ஸ்காட் இதுகுறித்து தாயிடம் பேசினால் தீர்த்துக்கட்டிவிடுவேன் என மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்