இரவு வெளியே தங்கிய காதலி: பதிலுக்கு காதலன் செய்த வெறிச்செயல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பொறாமை பிடித்த காதலன் ஒருவர், தனது காதலி ஒரு இரவு வெளியே தங்கியதற்காக அவரை கொடூரமாக கொலை செய்து இரண்டு நாட்கள் அவரது பிணத்துடன் இருந்திருக்கிறார்.

நியூயார்க்கைச் சேர்ந்த Angel Feliz-Rodriguez (23), புதனன்று பொலிசாரிடம் சென்று தனது காதலியைக் கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்திருக்கிறார்.

அவரது வீட்டை சோதனையிட்டபோது Indira Ramirez-Rivera (21), என்னும் அவரது காதலி பாத்ரூமில் பிணமாக கிடந்ததைக் கண்டிருக்கின்றனர்.

Indiraவின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததை பொலிசாரால் காண முடிந்தது.

Indira கழுத்து நெறிக்கப்பட்டு, உடல் முழுவதும் அடிக்கப்பட்டு, பெண்ணுறுப்பில் வெட்டுக் காயங்களுடன் கிடந்திருக்கிறார்.

ஒரு நாள் இரவு தன்னை விட்டு விட்டு வெளியே தங்கிய Indiraவை Rodriguez மோசமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்.

தான் செய்த தவறுக்கு அவர் அனுபவிக்க வேண்டும் என எண்ணி Indiraவுக்கு அவர் இந்த மோசமான தண்டனையை தனது காதலிக்கு கொடுத்திருக்கிறார்.

Rodriguez மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரது பெண்ணுறுப்பிலும் காயங்கள் காணப்படுவதால் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து தெரியவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்