அக்காவுக்கு பதிலாக கர்ப்பமான தங்கை.... வயிற்றில் வளரும் இரட்டை குழந்தைகள்.... வெளியான பின்னணி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக முடியாத சூழலில் அவர் சார்பாக அவரின் சகோதரி இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்துள்ளார்.

விட்னே பிள்ஸ்னரும், ஜில் நுயி ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள்.

திருமணமான விட்னேவுக்கு Neurofibromatosis என்னும் விசித்திர நோய் ஏற்பட்டது. இதன் காரணமாக அவரால் கர்ப்பமாக முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அப்படியே கர்ப்பமானாலும் அது விட்னேவின் உயிருக்கு ஆபத்து எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சகோதரி மேல் உயிரையே வைத்திருந்த ஜில் அவருக்காக ஒரு நெகிழ்ச்சி விடயத்தை செய்ய முன்வந்தார்.

அதன்படி விட்னே கணவரின் விந்தணு மற்றும் தானம் பெறப்பட்ட கருமுட்டையை தான் சுமந்து விட்னே சார்பில் கர்ப்பமாக முன்வந்தார் ஜில்.

இது தொடர்பான முதற்கட்ட மருத்துவ பரிசோதனை தோல்வியடைந்த நிலையில் இரண்டாம் முறை வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து ஜில் தற்போது இரட்டை குழந்தைகளுடன் 29 வார கர்ப்பிணியாக உள்ளார்.

இது குறித்து விட்னே கூறுகையில், எனக்கு இரட்டை குழந்தைகள் கிடைக்க போவது மகிழ்ச்சியாக உள்ளது, ஏனெனில் நானும் ஜில்லும் இரட்டையர்கள் தான்.

அதனால் அந்த அன்பும், பாசமும் எப்படியிருக்கும் என எங்களுக்கு தெரியும். எனக்காக ஜில் வயிற்றில் குழந்தையை சுமப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

இதனிடையில் ஜில்லுக்கு வரும் ஜூன் மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்