அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கு நன்றி தெரிவித்த சுந்தர் பிச்சை

Report Print Givitharan Givitharan in அமெரிக்கா

கடந்த புதன் கிழமை அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சையை சந்தித்திருந்தார்.

இச்சந்திப்பு தொடர்பான தகவலை தனது டுவிட்டர் தளத்திலும் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.

இதன்போது சுந்தர் பிச்சையை 'President of Google' என வர்ணித்திருந்தமை பலராலும் பேசப்பட்டுவருகின்றது.

இப்படியிருக்கையில் இச்சந்திப்பை ஏற்படுத்தியதற்கு சுந்தர் பிச்சை ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது கூகுள் தொழில்நுட்பத்தினை சீனாவுக்கு விரிவுபடுத்துவது தொடர்பிலும், அமெரிக்க இராணுவத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதேவேளை இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக்கினையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்