பயங்கர தீ விபத்தில் வீட்டை இழந்து சோகமான பெண்: அடுத்த மாதமே லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்க தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு அடுத்த ஒரு மாதத்திலே லாட்டரியில் 150,000 டொலர்கள் கிடைத்துள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த லீ ஆண்ட்ரா க்ளே என்கிற பெண் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் தன்னுடைய வீட்டை பறிகொடுத்துள்ளார். இதனால் சரியான மின்சார வசதி கூட இல்லாததை தற்காலிக வீட்டில் தான் அவர் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 23ம் திகதி மேற்கு ஹெலினா பகுதியில் லொட்டரி டிக்கெட் ஒன்றினை வாங்கியுள்ளார். 25ம் திகதி அதனை சரிபார்த்தபோது வெற்றி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால் அதனை உறுதி செய்ய மறுபடியும் சார்பார்ப்பதற்குள் மின்சாரம் இல்லாமல் போயுள்ளது. மீண்டும் செவ்வாய்க்கிழமையன்று சரிபார்த்தபோது 50,000 டொலர்கள் வெற்றி பெற்றிருப்பது தெரியவந்தது. அந்த மகிழ்ச்சியில் ஒரு பவர் ப்ளேக்கு கூடுதல் டொலரை செலுத்த முடிவு செய்தார், அது அவருக்கு 50,000 டொலர்கள் பரிசை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.

பின்னர் இதுகுறித்து பேசிய க்ளே, எனக்கு அதிகமான உறவினர்கள் கிடையாது. ஆனால் கடவுள் நம்பிக்கை அதிகம். அவர் விரைவில் என்னை ஆசீர்வதிப்பார் என்பது எனக்கு தெரியும்.

இந்த பணத்தில் ஒரு புதிய வீடு மற்றும் கார் வாங்கலாம் என முடிவு செய்துள்ளேன். அதோடு அல்லாமல் ஒரு சிறிய தொகையை உள்ளூர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக கொடுப்பேன் என மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்