அமெரிக்க மருத்துவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இளம்பெண்: பிரியங்கா சோப்ராவிடம் மனம் திறந்த தருணம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அமைப்பின் மருத்துவராக இருந்த லாரி நாஸரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு இளம்பெண், பிரியங்கா சோப்ராவிடம் முதல்முறையாக மனம் திறந்திருக்கிறார்.

தான் ஜிம்னாஸ்டிக் குழுவின் மருத்துவராக இருந்தபோது, உடல் பரிசோதனை என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையோடு விளையாடியிருக்கிறார் மருத்துவர் நாஸர்.

இந்நிலையில், பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் தன்னம்பிக்கை இழந்து படுக்கையறைக்குள் சுருண்ட ஒரு இளம்பெண், முதல் முறையாக நடிகை பிரியங்கா சோப்ராவிடம் மனம் திறந்திருக்கிறார்.

நடிக பிரியங்கா சோப்ரா If I Could Tell You Just One Thing (நான் ஒரு விடயம் சொல்ல விரும்பினால் இதைத்தான் சொல்ல விரும்புவேன்) என்னும் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்.

தனது முதல் நிகழ்ச்சிக்காக அவர் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான Simone Bilesஐ பேட்டி கண்டார்.

Simone Biles, முதலில் பாலியல் துஷ்பிரயோகம் என்பதன் பொருளை தான் உணரவில்லை என்றும், தன் தோழிகள் எல்லாரும் நாஸர் மீது குற்றம் சுமத்தும் போதுதான், தனது நெருங்கிய தோழி ஒருவர் மூலம் இதுதான் பாலியல் துஷ்பிரயோகம் என்று தெரிந்து கொண்டதாகவும் தெரிவிக்கிறார்.

அப்போதுதான் தானும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதை உணர்ந்துகொண்ட Simone Biles, தன் தாயிடம் தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்திருக்கிறார்.

ஆனால் அதனால் அவருக்கு ஒரு எதிர்மறை நிகழ்வும் ஏற்பட்டிருக்கிறது. தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவள் என்ற எண்ணம் குற்ற உணர்வை உண்டாக்க, படுக்கையறைக்குள்ளேயே சுருண்டிருக்கிறார்.

தூக்கம் என்பது சாவுக்கு அருகில் உள்ளது என்பதால் தான் எப்போதும் தூங்கிக் கொண்டே இருந்ததாக தெரிவிக்கிறார் Simone Biles.

தன்னை ஒரு விளையாட்டு வீராங்கனையாகத்தான் உலகம் பார்க்கவேண்டுமேயன்றி பாலியல் துஷ்பிரயோகத்தால் பதிக்கப்பட்டவராக பார்க்கக்கூடாது என்று எண்ணி நீண்ட காலத்திற்கு தனக்கு நடந்ததை வெளியில் சொல்லாமல் இருந்ததாக தெரிவிக்கிறார் அவர்.

ஆனால் ஒரு கட்டத்தில் இது என்னுடைய தவறு அல்ல, அது அந்த நாஸரின் தவறு, அந்த விளையாட்டு அமைப்பின் தவறு என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட தான், தனது தோழிகள் தன்னை விட மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும் அதிலிருந்து துணிந்து வெளியே வந்ததைக் கண்டு தானும் வெளியே வந்ததாக தெரிவிக்கிறார்.

இது நான் அல்ல, நான் இதை விட அதிகம், நான் தனித்தன்மை வாய்ந்த, ஸ்மார்ட்டான, திறமையுள்ள, விளையாட்டில் ஆர்வமுள்ள பெண் என்று கூறும் Simone Biles, நான் எனது விளையாட்டை விட மாட்டேன், சாதித்துக் காட்டுவேன் என்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்