அழகிய இளம்பெண்ணுக்கு 2 நாட்கள் சிறை: காரணம் என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் அழகிய இளம்பெண் ஒருவர் கண்ணீர் வழிய பொலிஸ் அதிகாரிகளால் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சியைக் காண முடிந்தது.

அவருக்கு இரண்டு நாட்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, 38 நாட்கள் அவர் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

Tay'lor Smith (19) என்ற அந்த பெண் செய்த குற்றம். தோழிகளுடன் நீர் வீழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த Tay'lor Smith, தனது தோழிகளில் ஒருவரான Jordan Holgerson (16) என்பவரை அவர் எதிர்பாராத நேரத்தில், அவர் நின்றிருந்த பாலம் ஒன்றிலிருந்து திடீரென பிடித்து தள்ளி விட்டார்.

சுமார் 50 அடி உயரத்திலிருந்து தண்ணீரில் விழுந்த Jordanஇன் விலா எலும்புகளில் ஆறு முறிந்ததோடு, நுரையீரலில் துவாரம் ஏற்பட்டது.

அத்துடன் உடல் முழுவதும் கீறல்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Jordanக்கு இன்னும் பிஸியோதெரபி சிகிச்சை தொடர்கிறது.

நீதிபதி முன் விளக்கமளித்த Jordan, தான் இன்னும் வலியாலும், பயத்தாலும், அதிர்ச்சியாலும் அவதியுறுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Jordan கூறியதை கவனித்துக் கேட்ட நீதிபதி, அவருக்கு ஏற்பட்ட மோசமான காயங்களுக்காக Tay'lor Smith சில நாட்கள் சிறைக்கு சென்றேயாக வேண்டும் என்று கூறி அவருக்கு 2 நாட்கள் சிறைத்தண்டனையளித்து தீர்ப்பளித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்