11 வயதில் மைக்கேல் ஜாக்சனின் தந்தை பலமுறை பாலியல் வன்முறை செய்ததாக அவருடைய சகோதரி Latoya பகீர் கிளப்பியுள்ளார்.
மைக்கேல் ஜாக்சனின் மூன்றாவது சகோதரியான Latoya தன்னுடைய காதலன் ஜாக் கோர்டனை திருமணம் செய்துகொண்டது முதலே குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.
கடந்த ஆண்டு உயிரிழந்த இவருடைய தந்தை ஜோ, சிறுவயதில் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து 1991ம் ஆண்டு தான் எழுதிய 'Growing Up In The Jackson Family' என்னும் புத்தகத்தில், ஒருநாள் நான் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தேன்.
அப்பொழுது என்னுடைய தந்தை அவருடைய படுக்கையை விட்டு என்னுடைய படுக்கைக்கு வந்தார். வேண்டாம் என என்னுடைய தாய் பலமுறை கெஞ்சியும், அதனை பொருட்படுத்தாமல் என்னுடைய தந்தை பாலியல் வன்புணர்வு செய்தார்,
என்னுடைய மூத்த சகோதரி ரீபி ஜாக்சன் அவளுடைய 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே இதுபோன்று என்னிடம் நடந்துகொள்ள ஆரம்பித்தார் என தெரிவித்துள்ளார்.
பின்னர் புத்தக விளம்பரத்திற்காக தனியார் தொலைக்காட்சியில் கலந்துகொண்டு பேசுகையில், அங்கும் தன்னுடைய தந்தை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். என்னுடைய தந்தை மிகவும் மோசமான முறையில் என்னிடம் நடந்து கொண்டார்.
அந்த சமயங்களில் மனதளவில் நான் அதிகம் பாதிக்கப்பட்டேன். என்னுடைய மூத்த சகோதரிகளுக்கு இப்படி நடந்ததா என்பது எனக்கு தெரியாது.
அவர்கள் இதுவரை எதுவும் பேசவில்லை. எதுவும் நடந்திருக்காது என்று தான் நானும் நினைக்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய சகோதரன் மைக்கேல் ஜாக்சன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றம் குறித்து பேசுகையில், என்னுடைய அம்மா ஒருமுறை மைக்கேல் அறையிலிருந்து இரண்டு காசோலைகளை கண்டெடுத்தார்.
மைக்கேல் ஜாக்சனிடம் பயின்ற சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தான் அந்த காசோலைகள் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை கண்டறிந்து கடும் கோபமடைந்தார்.
என்னுடைய அம்மாவிற்கு நன்கு தெரியும். அதிகமான சிறுவர்கள் என்னுடைய சகோதரனின் அறையில் சென்று தங்குவார்கள். அடுத்தடுத்து என சிறுவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். இந்த விவகாரத்தில் ஒருபோதும் அவனை நான் ஆதரிக்க மாட்டேன் என கூறினார்.
1990களில் என்னுடைய சகோதரன் சிறுவர்களுடன் நெருக்கமாக இருந்தான் என்பது எனக்கும் தெரியும். இந்த அளவிற்கு தெரிந்தும்கூட இந்த குற்றசாட்டுக்களை இப்போது என்னுடைய தாய் மறுக்கிறாள், அது தான் என்னை காயப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.