திருமணமான புதிதிலேயே அழகிய தம்பதிக்கு நேர்ந்த கதி.... அதிலிருந்து மீண்ட நெகிழ்ச்சி பின்னணி

Report Print Raju Raju in அமெரிக்கா

திருமணமான உடனேயே கணவன் மற்றும் மனைவிக்கு புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் இருவரும் அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் Illinois மாகாணத்தை சேர்ந்தவர் பிரயன். இவருக்கும் மிச்சேல் முர்தக் என்ற பெண்ணுக்கும் கடந்த 2015-ல் திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில வாரங்களில் பிரயனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது பரிசோதனையில் அவருக்கு இரத்த புற்றுநோய் உள்ளது தெரியவந்தது.

இதற்கு சில மாதங்கள் கழித்து பிரயன் மனைவி மின்சேலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது.

இதையடுத்து இருவரும் தொடர் சிகிச்சை எடுக்க தொடங்கினார்கள்.

தம்பதிகள் ஒன்றாக புற்றுநோயை எதிர்த்து போராடியதால் என்னவோ அதுவே அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதலை அதிகமாக்கியது.

இதனிடையில் தன்னம்பிக்கையுடன் தொடர் சிகிச்சை எடுத்து கொண்டதன் பலனாக மிச்சேலுக்கு புற்றுநோய் குணமாகியுள்ளது.

அதே போல பிரயினுக்கு இறுதி சிகிச்சை கடந்த அக்டோபரில் மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் தங்களது வாழ்க்கையை இருவரும் புதிதாக தொடங்கியுள்ளனர்.

இது குறித்து தம்பதி கூறுகையில், எங்களுக்கு வந்த புற்றுநோய் நாங்கள் எவ்வளவு தன்னம்பிக்கை மற்றும் தைரியமானவர்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தியது.

எங்களின் குழந்தைகளுக்காகவே நாங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என விரும்பினோம்.

எங்களுக்கு உள்ள நோய் குறித்து எங்களின் குழந்தைகளிடம் சூசகமாக கூறினோம், ஆனால் அவர்கள் பயப்படுவார்கள் என்பதால் புற்றுநோய் என்ற வார்த்தையை அவர்களிடம் பயன்படுத்தவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்