இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவனின் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த மோசமான செயல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது கணவனை முதலை கொன்று தின்றுவிட்டதாக கூறிவந்த மனைவி, கணவனின் நெருங்கிய நண்பனுடன் மாயமான வழக்கில் 18 ஆண்டுகளுக்குப்பிறகு உண்மை வெளிவந்திருக்கிறது.

2000ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி, புளோரிடாவில் வசித்துவந்த Mike Williams (31)இன் ஆறாவது ஆண்டு திருமண நாள்.

ஆனால் Seminole ஏரியில் வேட்டைக்குப்போன அவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை. தனது கணவர் வீடு திரும்பவில்லை என Mikeஇன் மனைவி Denise பொலிசில் புகாரளிக்க, பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

44 நாட்களாகியும் Mike கிடைக்காததால், அவரை முதலை கொன்று தின்றிருக்கலாம் எனக்கூறி வழக்கை முடித்தனர் பொலிசார்.

இதற்கு சில மாதங்கள் முன்புதான் Mikeஇன் நெருங்கிய நண்பனான Brian உதவியுடன் Denise 1.75 மில்லியன் டொலர்களுக்கு அவர் பெயரில் இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார்.

இதற்கிடையில் Mikeஇன் தாயான Cheryl மட்டும், தனது மகன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே கூறிவந்தார்.

இந்நிலையில் Mikeஇன் நெருங்கிய நண்பனான Brian, தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு Deniseஉடன் பழக ஆரம்பித்திருக்கிறார், 2005இல் இருவரும் திருமணமும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த திருமணம் 2012இல் முறிந்தது.

ஏன் அவர்கள் பிரிந்தார்கள் என்றே வெளியுலகுக்கு புரியாத நிலையில், ஒரு நாள் Denise சென்ற காரில் பதுங்கியிருந்த Brian அவளைக் கடத்திச் சென்று தாக்கியதாக பொலிசார் அவரை கைது செய்தார்கள்.

2017ஆம் ஆண்டு Brianமீது Deniseஐ கடத்தி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மறுநாள் பொலிசார் வழக்கில் ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.

ஆம், தனது நண்பன் Mikeஐ தான்தான் கொலை செய்து விட்டதாகவும், Deniseஇன் ஐடியாபடிதான் அப்படி செய்ததாகவும், இன்சூரன்ஸ் பணத்துக்காகவே அவ்வாறு செய்யத்தூண்டியதாகவும் Brian வாக்குமூலம் கொடுத்தார்.

Mike கொல்லப்பட்டு 18 ஆண்டுகளுக்குப்பிறகு அவரைக் கொலை செய்த குற்றத்திற்காக Deniseக்கும் Brianக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Deniseக்கு ஜாமீனில் வர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Brian 2033இல் ஜாமீனில் வெளிவரலாம், ஆனால் அப்போது அவருக்கு 63 வயதாகியிருக்கும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்