தொலைபேசி கம்பத்தில் மாட்டிக்கொண்ட பூனையை மீட்ட நபருக்கு ஏற்பட்ட சோகமும் மகிழ்ச்சியும்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தொலைக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஒருவர் தொலைபேசிக் கம்பம் ஒன்றில் சிக்கித் தவித்த பூனையை மீட்டதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பிலதெல்பியாவைச் சேர்ந்த மாரீஸ் ஜெர்மன் என்பவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தனது பூனையை மீட்க உதவும்படி அவரை ஒருவர் கேட்டுக் கொண்டார்.

அந்த பூனை தொலைபேசிக் கம்பம் ஒன்றில் சுமார் 12 மணி நேரங்களாக மாட்டிக் கொண்டு தவித்தது.

உடனடியாக அங்கு விரைந்த மாரீஸ், தனது நிறுவன கிரேன் ஒன்றை பயன்படுத்தி அதை மீட்டார்.

அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, பூனையின் உரிமையாளர் மாரீஸுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஆனால் மாரீஸ் பணியாற்றிய Verizon என்ற நிறுவனமோ அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

மாரீஸ் பயன்படுத்திய கிரேன், அவர் பயன்படுத்திய நோக்கத்திற்கானது அல்ல என்றும், நிறுவனத்தின் கருவிகளை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி அவரை பணியிடை நீக்கம் செய்ததாக நிறுவனம் விளக்கமும் அளித்தது.

இதற்கிடையில் மாரீஸின் சக ஊழியரான Keith Morales மற்றும் சில சக ஊழியர்கள் அவருக்காக நன்கொடை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.

ஒரு செல்லபிராணியை காப்பாற்றுவதற்காக மாரீஸ் இந்த நற்செயலை செய்தும், Verizon நிறுவனம் அவரை பணியிடை நீக்கம் செய்து விட்டது, இந்நிலையில் நாங்கள் சேகரிக்கும் இந்த நன்கொடை அவரது 15 நாள் சம்பளத் தொகைக்கு ஈடாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகவே இதைச் செய்கிறோம் என்று கூறியுள்ளார் Keith Morales.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்