நிர்வாண அழகிகள் சுற்றித்திரிந்த பிளேபாய் மாளிகையில் ஆவிகள்?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பிளேபாய் பத்திரிகையின் ஆசிரியர் வாழ்ந்த மாளிகையில் இன்று ஆவிகள் சுற்றுவதாக அவரது காதலி தெரிவித்துள்ளார்.

Hugh Hefner பிளேபாய் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, அழகிகள் சுற்றித்திரிந்த மாளிகையில், இன்று ஆவிகள் சுற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆவி வேட்டையாடுபவர் என தன்னை அழைத்துக் கொள்ளும் Bridget Marquardt (45), பிளேபாய் இதழின் ஆசிரியரான Hugh Hefnerஇன் நீண்ட நாள் காதலி.

Hugh Hefner தனது 91ஆவது வயதில் இறந்த பின்னரும், அவரது மாளிகையில் தொடர்ந்து வாழ்ந்து வரும் Bridget, படுக்கையறை ஒன்றில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது, வாசலில் ஒரு பெண் நிற்பதை பார்த்துள்ளார்.

அவருடன் இருந்த தோழிகளும் அந்த பெண்ணைக் கண்ட நிலையில் பயந்து நடுங்க, ஒரு பெண் பயத்தில் அழ ஆரம்பித்து விட்டாராம்.

பிளேபாய் மாளிகையில் ஆவிகளைக் கண்டதாக மக்கள் தெரிவிப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே அழகான பெண்களின் ஆவிகளையும் வயதான ஒரு மனிதனின் ஆவியையும் பார்த்துள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை இறந்த பின்னரும் Hugh Hefner தனது அழகிகளையும் மாளிகையையும் விட முடியாமல் அவர்களுடன் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்