நியூசிலாந்து தாக்குதலுக்கு அமெரிக்க ஊடகங்கள் என்னை குற்றம்சாட்டுகின்றன! புலம்பும் டொனால்டு டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

நியூசிலாந்து தாக்குதலுக்கு தன்னை ஈடுபடுத்தி குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் அதிகநேரம் வேலை செய்வதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் உள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ஊடகங்கள் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தன்னை ஈடுபடுத்தி குற்றம்சாட்ட பார்ப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘நியூசிலாந்து தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்டுவதற்காக அமெரிக்க ஊடகங்கள் இரவு, பகலாக Overtime வேலை பார்க்கின்றன.

இதில் என்னை ஈடுபடுத்த ஊடகங்கள் பெரும்பாடு படுகின்றன. இதுபோன்ற போலிச் செய்திகள் கேலிக்குரியதாகும்’ என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்காவைச் சேர்ந்த சில ஊடகங்கள் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை வெள்ளை இனவெறியர் என்றும், பயங்கரவாதத்தின் வாக்குறுதியாக செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த வெள்ளை மாளிகை தலைவர் மைக் முல்வானே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை இனவெறியர் இல்லை. இதை பலமுறை கூறிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

EVAN VUCCI/AP/REX/SHUTTERSTOCK

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்