பெண்களை ஏமாற்றி தன்னுடைய உயிரணுவால் 48 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர்: பரிதவிக்கும் குழந்தைகள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

குழந்தையின்மைக்காக மருத்துவரை நாடிச் சென்ற சுமார் 50 பெண்களுக்கு, அவர்களுடைய அனுமதியின்றி தன்னுடைய உயிரணுவையே செலுத்தி, 48 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள ஒரு அமெரிக்க மருத்துவரைக் குறித்த செய்திகள் வெளியாகி அந்த பெண்களின் குழந்தைகளை பரிதவிக்கச் செய்துள்ளன.

Heather Woock (33) என்ற பெண்ணுக்கு இன்னொரு பெண்ணிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

தொலைபேசியில் பேசிய பெண், Heatherஇடம், தான் அவரது சகோதரி என்று கூற, அதிர்ச்சியடைந்தார் அவர்.

அது மட்டுமின்றி, தொடர்ந்து பல அழைப்புகள் Heatherக்கு வரத்தொடங்கின. கடைசியில் நான்கு பெண்கள் சந்தித்து, என்ன நடந்திருக்கும் என தங்கள் தாய்மார்கள் உதவியுடன் விவாதிக்க, ஒரு உண்மை தெரிய வந்தது.

அது, Cline என்னும் மகப்பேறு மருத்துவரின் மருத்துவமனைக்கு அந்த நான்கு பெண்களின் பெற்றோர்களும் குழந்தையின்மைக்காக சென்றிருந்தார்கள் என்பதுதான். உடனடியாக DNA மூலம் பெற்றோரை அறியும் இணையதளத்தின் உதவியை நாட, அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அது அவர்கள் நான்கு பேர் மட்டுமல்ல, இன்னும் நான்கு பேரும் கூட, ஒரே தந்தைக்கு பிறந்தவர்கள் என்பதுதான்.

பின்னர் அனைவருமாக அந்த மருத்துவரான Clineஐ சந்தித்தபோது, 50 பெற்றோருக்கு அவர்கள் அனுமதியின்றி தனது உயிரணுவை பயன்படுத்தி கருவுறச் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்ட Clineக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, காரணம், அமெரிக்காவின் இண்டியானா மாகாண சட்டங்களின்படி, மருத்துவர்கள் தங்கள் உயிரணுவை செலுத்தி கருவுறச் செய்வது குற்றமில்லை.

இதனால் கொதித்துப்போன பிள்ளைகள், அவரை தண்டிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.

அவர் எங்களை ஏமாற்றி விட்டார், எங்கள் உடன் பிறந்தோருடன் இளமையை செலவிடும் பாக்கியத்தை கெடுத்து விட்டார், எங்கள் தாய்மார்கள் ஏமாற்றப்பட்டது போல் உணர்கிறோம் என்கிறார்கள் அந்த பிள்ளைகள்.

குழந்தையின்றி அவமானமும், சலிப்பும், சமுதாயத்தால் மோசமான அனுபவங்களையும் சந்தித்து எப்படியாவது ஒரு குழந்தை பிறந்து விடாதா என்ற நப்பாசையில், ஐந்து மாத இடைவெளியில் 15 முறை செயற்கை கருவூட்டல் முறையில் கருவுற முயன்ற ஒரு பெண், தான் 15 முறை கற்பழிக்கப்பட்டதாக உணர்வதாக தெரிவிக்கிறார்.

இன்னொரு பக்கம் தொடர்ந்து பிள்ளைகள் மேற்கொண்ட முயற்சிகளில், தாங்கள் உடன் பிறந்தவர்கள் 48 பேர் என்ற உண்மை தெரியவர, மகிழ்ச்சி ஒரு புறமும், கோபம் ஒரு புறமுமாக எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள் அந்த 48 பேரும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்