திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை தோழனுக்கு நேர்ந்த பரிதாபம்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை தோழன் மயங்கி கீழே விழுந்து முகத்தை வேகமாக மோதி கொண்டதில் அவரின் பற்கள் உடைந்துள்ளது.

வாஷிங்டனில் ஒரு இளம் ஜோடிக்கு திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது மணமக்களின் அருகில் மாப்பிள்ளை தோழன் நின்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அவர் அப்படியே திடீரென கீழே வேகமாக மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து மயங்கத்தில் இருந்து எழுந்த அந்த நபர் தனது வாயை கைக்குட்டையால் மூடி கொண்ட நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதனிடையில் குறித்த நபரின் சில பற்கள் உடைந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

மாப்பிள்ளை தோழன் கீழே வேகமாக விழும் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்