அமெரிக்காவில் இனவெறிக்கு ஆளான தமிழ்பட நடிகை! அவரே கூறிய தகவல்

Report Print Kabilan in அமெரிக்கா

நடிகை தனிஷா முகர்ஜி அமெரிக்காவில் தான் இனவெறியோடு அவமரியாதையை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகை கஜோலின் தங்கை தனிஷா முகர்ஜி. இவர் தமிழில் ‘உன்னாலே உன்னாலே’ என்ற படத்தில் 2வது கதாநாயகியாக நடித்தவர் தனிஷா. ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது டி.வி.நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், தான் அமெரிக்காவில் இனவெறியோடு அவமரியாதையை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது ஒருவர் என்னை அருவெருப்பாக பார்த்தார்.

கேவலமான வார்த்தைகளால் பேசினார். அவரது செயல் குரூரமாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தது. என்மீது இனவெறியோடு நடந்து கொண்டார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், நான் பொறுமையாக இருந்தேன். ஓட்டல் ஊழியர் ஒருவர் நான் பார்க்க வித்தியாசமாக இருந்ததால் அந்த நபர் அப்படி பேசியதாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் இனவெறி அனுபவத்தை நான் சந்தித்தேன். இதற்கு முன்பு இதுபோல் நடந்தது இல்லை. என்னுடன் வந்த தோழிகளும் இதை பார்த்து அதிர்ச்சியானார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்