ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளுடன் காதல்! இருவர் குறித்தும் வெளியான உண்மையால் அதிர்ச்சியில் உறைந்த காதலன்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் நபர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை டேட்டிங் செய்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த திடுக்கிடும் செயலை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

மேரி பெத் மற்றும் அன் ராபர்ட் ஆகிய இருவரும் சகோதரிகள் ஆவார்கள்.

இதில் மேரியுடன் சில காலத்துக்கு முன்னர் ஒரு நபர் டேட்டிங் செய்தார்.

பின்னர் மேரி தனது சகோதரி அன் ராபர்டை அந்த நபருக்கு அறிமுகப்படுத்தி வைக்க அவருடனும் அந்த நபர் தொடர்பு ஏற்படுத்தி கொண்டர்.

இந்நிலையில் சமீபத்தில் அந்த நபர் மேரி மற்றும் அன் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அவர்கள் அந்த நபரிடம், கடந்த 2015-ல் எங்கள் தந்தை ஆண்டனி இறந்துவிட்டார். அவர் இயற்கையாக இறந்தார் என பொலிசார் உட்பட அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து தான் அவரை கொலை செய்தோம் என கூற அந்த நபர் அதிர்ந்து போயுள்ளார்.

இது குறித்து உடனடியாக அவர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பொலிசார் மேரி மற்றும் அன்-னை கைது செய்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், எங்கள் தந்தை ஆண்டனிக்கு புற்றுநோய் இருந்தது.

அவர் எப்போது வேண்டுமானாலும் இறந்துவிடலாம் என்ற நிலையில் இருந்தார். மேலும் அவரை எங்களால் கவனித்து கொள்ள முடியவில்லை.

இதனால் அவரை கருணை கொலை செய்ய முடிவெடுத்தோம்.

அதன்படி மதுவில் நிறைய தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்தோம், ஆனால் அதில் அவர் உயிர் போகவில்லை.

பின்னர் ஆண்டனி தூங்கி கொண்டிருந்த போது அவர் முகத்தை தலையணையால் அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தோம்.

பின்னர் அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து எங்கள் தந்தை மூச்சு விட சிரமப்படுவதாக நாடகமாடினோம்.

நாங்கள் தான் தந்தையை கொன்றோம் என பொலிசாரால் அப்போது கண்டுப்பிடிக்க முடியவில்லை என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers