டிரம்பின் செயலால் தனது பெயரை மாற்றிக்கொண்ட ஆப்பிள் சிஇஓ! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் பெயரை மாற்றி கூறிய விடயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஆகியோரின் சந்திப்பு நடந்தது. இதில் அமெரிக்கர்கள் பலருக்கும் வேலை கிடைக்க உதவிய டிம் குக்கிற்கு ஜனாதிபதி டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

அப்போது, டிம் குக்கின் பெயரை டிம் ஆப்பிள் என மாற்றிக் கூறினார் டிரம்ப். இதனை டிம் குக்கும் பெரியாதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தனது ட்விட்டர் அக்கவுண்ட்டின் பெயரை டிம் என்ற பெயருடன் ஆப்பிள் லோகோவை இணைத்து தனது பெயர் இனி ‘டிம் ஆப்பிள்’ தான் என்பது போல் மாற்றியிருக்கிறார்.

எனினும் இந்த லோகோ ஆப்பிள் சாதனங்களில் மட்டும் தான் தெரியுமாம். டிம் குக்கின் இந்த செயலைக் கண்ட நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் டிரம்பை தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

டிம் குக்கின் பெயரை டிரம்ப் தவறாக உச்சரிக்கும் வீடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்