பயங்கரமான தீ விபத்தில் பற்றி எரியாமல் இருந்த பைபிள்கள்: அதிர்ந்து போன தீயணைப்பு துறையினர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தின் போது ஒரு பைபிள் கூட எரியாமல் இருந்ததை பார்த்து தீயணைப்பு துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு வர்ஜீனியா Grandview பகுதியில் ஃப்ரீடம் மினிஸ்ட்ரீஸ் என்னும் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு கடந்த மார்ச் 3-ம் திகதி நள்ளிரவு 1 மணிக்கு பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், உள்ளே செல்ல முடியாமல் நீண்ட நேரம் தவித்தனர். ஒரு வழியாக தீயின் வேகம் குறைந்த பின்னர், உள்ளே சென்று பணிகளை மேற்கொண்டனர்.

கட்டிடம் முழுவதுமே தீயில் கருகியிருந்த வேளையில், அங்கு வைக்கப்பட்டிருந்த பைபிள்கள் மட்டும் கருகாமல் இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து புகைப்படங்களை அவர்கள் தங்களுடைய அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து வைரலாக பரவி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்