ஹிலாரி கிளிண்டன் முக்கிய அறிவிப்பு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நடந்தேறும் சம்பவங்கள் தன்னை மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவும், 2020 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் ஹிலாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில், ஒரு பெரிய அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவான முதல் பெண்மணி இவரே.

கடந்த 2016 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்டார். தேர்தல் கணிப்புகள் ஹிலாரியின் பக்கம் இருந்தாலும் முடிவுகள் அவருக்கு எதிராக அமைந்தன.

அப்போது, தேர்தலில் தோற்றாலும் தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன் என்று அறிவித்தார் ஹிலாரி. அடுத்த ஆண்டு தேர்தலுக்காக அமெரிக்கா தயாராகி வரும் நிலையில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹிலாரி,

நான் எதை நம்புகிறேனோ அதற்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன். அதுகுறித்துப் பேசுவேன். ஆனால் நாட்டில் தற்போது நடந்தேறும் அனைத்தும் என்னை மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது என்றார்.

மட்டுமின்றி ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாகப் போட்டியிட எண்ணுபவர்களிடம் பேசி வருகிறேன்.

டிரம்ப் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் நிறைவேற்றாத வாக்குறுதிகளின் பட்டியலே நீளமாக இருக்கிறது. அதுகுறித்துப் பேசுங்கள் என்று கூறியுள்ளேன் என்றார்.

1947 ஆம் ஆண்டு பிறந்த ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க அரசியலில் பிரபலமானவர்.

ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அமெரிக்க செனட் சபை உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers