மைக்கேல் ஜாக்சனின் அறையில் அன்று நடந்த பாலியல் சம்பவம்: ஆண்டுகள் கழித்து அம்பலப்படுத்திய நபர்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

Leaving Neverland என்ற ஆவணப்படம் மறைந்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பாலியல் குறித்த சம்பவங்களை தெரியப்படுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில், மைக்கேல் ஜாக்சனின் Neverland பண்ணை வீட்டில் வைத்து குழந்தைகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் அவரால் நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களும் பேட்டி அளித்துள்ளதும் ஆவணப்படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த James Safechuck என்பவர் அளித்துள்ள பேட்டியில், தனக்கு 10 வயதில் மைக்கேல் ஜாக்சனுடன் திருமணம் நடந்துவிட்டது என கூறிள்ளார்.

1987 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனின் படுக்கையறையில் வைத்து வைர மோதிரங்களை எனக்கு அணிவித்தார், அதன்பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.

நாம் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது, இனிமேல் என்னுடன் இருக்க வேண்டு என என்னிடம் கூறினார். அவருடனான உறவுமுறை எனக்கு புதிதாக இருந்தது. சில நாட்கள் என்னை பாலியவல் வன்கொடுமை செய்தார்.

மைக்கேல் ஜாக்சனை சந்தித்து சுமார் 5 மாதங்கள் கழித்து பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது. அவர் மீது இருந்த உணர்ச்சி காரணமாக நான் ஈர்க்கப்பட்டேன். நாங்கள் இருவரும் காதல் கொண்டிருந்தோம். நான் அவருடன் இல்லாதபோதும் அவரை நினைத்துக்கொண்டிருந்தேன்.

அவர் எனக்கு அணிவித்த வைர மோதிரம் தற்போது எனது குட்டி விரலுக்கு தான் பொருந்தும். பெண்கள் அணியும் மோதிரத்தை தற்போது வைத்திருக்க விரும்பவில்லை, இதனால் அதனை விற்பனை செய்யவிருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்