அன்று உலக நாடுகளின் இரக்கத்தை சம்பாதித்த சிறுமி: இன்று கொடூர குற்றவாளியாக அறியப்பட்ட கொடுமை

Report Print Arbin Arbin in அமெரிக்கா

பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து மிகவும் பிரபலமான லாரன் ஆஷ்லே என்பவர் தற்போது சிறாரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறி சிறைக்கு செல்ல உள்ளார்.

Girl in the Closet என உலக மக்களால் அறியப்பட்ட டெக்சாஸ் மாகாண பெண் தற்போது தம்மை ஆதரித்த அதே மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.

கொடூர வாழ்க்கையில் இருந்து தம்மை காப்பாற்றியவர்களை கூட வியப்பில் ஆழ்த்திக் கொண்டு 25 வயதான லாரன் 60 ஆண்டு கால சிறை வாசத்திற்கு செல்கிறார்.

14 வயதான சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காகவே லாரன் தண்டிக்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில் அறிமுகமான குறித்த சிறுமியை இரண்டு மாத காலம் இவர் கொடூர துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

லாரன் ஆஷ்லே தமது 2 வயது முதல் 10 வயது வரை தமது பெற்றோரால் குடியிருப்பின் கழிவறையில் தங்க வைக்கப்பட்டு கொடுமை அனுபவித்துள்ளார்.

உணவு தர மறுத்துள்ளதுடன், தமது வளர்ப்பு தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கும் இரையாகியுள்ளார் லாரன்.

2001 ஆம் ஆண்டு அண்டை வீட்டார் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிசார் சிறுமியான லாரனை காப்பாற்றியுள்ளனர்.

பெற்றோரிடம் இருந்து பொலிசாரால் லாரன் காப்பாற்றப்படும்போது அவரது உடல் எடை வெறும் 25 கிலோ என கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு காப்பாற்றியவர்களை சிறுமி லாரன் புன்னகையுடன் நன்றி கூறும் புகைப்படம் உலகமெங்கும் கவனத்தை ஈர்த்தது.

ஆனால் தற்போது குற்றவாளிகளின் உடையணிந்துள்ள லாரனை உலகம் அதிர்ச்சியுடனே பார்ப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்