மேகன் அழகில் மயங்கி $30,000 டொலர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்ட தாய்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

பிரித்தானிய இளவரசி மேகன் அழகில் மயங்கிய அமெரிக்க தாய் ஒருவர் $30,000 டொலர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிசிச்சை செய்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த Xochytl 'Xochi' Greer, என்கிற 36 வயது தாய்க்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் பொழுதே ஆண்களுடன் பேசுவதற்கு சிறிது தயக்கம் காட்டியுள்ளார்.

அதிலிருந்து மாறுவதற்கு முயற்சி செய்த அவர், அமெரிக்க நடிகையாக இருந்த மேகனின் அழகில் மயங்கி அவரை போலவே மாற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

மேகனை மிகவும் அழகான ஒரு பெண் என வர்ணிக்கும் Xochytl, அவரை போல மாற வேண்டும் என மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

உடனே அதற்கான வேலைகளில் இறங்கிய மருத்துவர்கள் அடிவயிற்றில் உள்ள கொழுப்பு மற்றும் மூக்கு போன்றவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் சீரமைக்க வேண்டும் எனவும், அதற்கு $30,000 டொலர்களை வரை தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி அதற்கான அறுவை சிகிச்சையும் 7 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. சிறிது நாட்கள் ஓய்விற்கு பின்னர் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்த Xochytl தான் அழகாக இருப்பதாக கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு பின் மூன்றாவது மகளை பெற்றெடுத்துள்ள Xochytl, மேகனை எப்பொழுது தொலைக்காட்சியில் பார்த்தாலும் என்னுடைய மகன், 'அம்மா, அம்மா' என அழைக்க ஆரம்பித்துவிடுவாள் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers