குற்றமே செய்யாமல் 39 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர்: இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில், செய்யாத குற்றத்துக்காக 39 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபருக்கு $21 மில்லியன் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிரைக் கோலே. தற்போது 71 வயதாகும் இவர், கடந்த 1978-ம் ஆண்டு தனது காதலி ரோன்டா விச்ட், அவரது 4 வயது மகன் டொனால்டு ஆகிய 2 பேரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு வழக்கை சந்தித்தார்.

தான் குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தில் கிரைக் வாதிட்ட போதிலும், இறுதியில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

39 ஆண்டுகள் பரோல் எதுவுமின்றி தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கிரைக்கை கருணை அடிப்படையில் கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் விடுதலை செய்தார்.

விடுதலை செய்யப்பட்டாலும் தன் மீதான களங்கத்தை துடைக்க ஆதாரங்களை திரட்டி, உறுதி குலையாமல் கிரைக் நீதிமன்றத்துக்குச் சென்றார்.

விசாரணை முடிவில் அவர் குற்றமற்றவர் என்றும், செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தவர் என்றும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து கிரைக்குக்கு $21 மில்லியன் இழப்பீடு வழங்க நஷ்டஈடு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு அந்த தொகை வழங்கப்பட்டது.

ஆனால் நஷ்ட ஈடு கிடைத்த மகிழ்ச்சியை விட தன் மீதான குற்றம் துடைக்கப்பட்டுள்ளதே தனக்கு பெரிய மகிழ்ச்சி என கிரைக் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers