பண்ணை வீட்டில் குழந்தைகளுடன் மைக்கேல் ஜாக்சனின் பாலியல் தொடர்பு: 80 மில்லியன் டொலர் இழப்பீடு

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

பாப் இசையின் கிங் என உலக மக்களால் கொண்டாடப்பட்ட மைக்கேல் ஜாக்சன் குறித்து சமீபத்தில் வெளியான லிவிங் நெவர்லாண்ட் என்ற ஆவணப்படம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி மக்களையும் அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் நெவர்லாண்ட் என்ற மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீட்டில் சிறுவர்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

லண்டனை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தங்களுக்கு மைக்கேல் ஜாக்சனால் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து கூறியது இந்த ஆவணப்படத்தில் முக்கிய காட்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது அவர்களுக்கு 32 வயதாகிறது. அமெரிக்காவில் ஒளிபரப்பட்ட இந்த ஆவணப்படம் மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தினர் மத்தியில் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் இந்த ஆவணப்படம் பிரித்தானியாவில் ஒளிபரப்பப்படவில்லை. குழந்தைகளை தவறான உறவுக்கு பயன்படுத்தியது குறித்து மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருந்தபோது அவர் மீது வழக்குதொடரப்பட்டு அதில் சாட்சியங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் அதிலிருந்து அவர் மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தற்போது வெளியாகியுள்ள ஆவணப்படம், மைக்கேல் ஜாக்சன் குழந்தைகள் விடயத்தில் மோசமாக நடந்துகொண்டார் என்பதை நிரூபிக்கும் விதமாக இருக்கிறது என சகோதரர் Keith spoke கூறியுள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் குழந்தைக்கு அதிக உதவிகளை செய்துள்ளார். குழந்தைகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மில்லியன் கணக்கான தொகையை செலவழித்துள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் தற்போது உயிருடன் இருந்திருந்தால், இன்றும் பாப் உலகில் சிறந்து விளங்கியிருப்பார். ஆனால் அவரை புகழை கெடுத்துவிட்டார்கள். இதனால் எனது குடும்பத்தினர் மிகவும் மனவேதனையில் இருக்கிறோம்.

எனவே, இதற்கு நஷ்டஈடாக 80 மில்லியன் டொலர் வழங்கவேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers