பூங்காவில் இருந்து தப்பி இளம்பெண்ணை கடித்து குதறிய சிங்கம்: நீண்ட நேரம் போராடி உயிரிழந்த சோக சம்பவம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் வனவிலங்குகள் பூங்காவில் இருந்து தப்பிய சிங்கம், பயிற்சியாளரை கடித்து கொன்றுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் வடகரோலினா பகுதியில் உள்ள விலங்குகள் பூங்காவில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருபவர் அலெக்ஸாண்ட்ரா பிளாக் (22).

சம்பவம் நடைபெற்ற அன்று வழக்கம்போல அலெக்ஸாண்ட்ரா தன்னுடைய குழுவுடன் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.

அப்போது வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த Matthai என்கிற 14 வயது சிங்கம், அங்கிருந்து வெளியில் தப்பி அலெக்ஸாண்ட்ராவின் கழுத்தை கவ்வி அதன் இருப்பிடத்திற்கு இழுத்து சென்றுள்ளது.

இந்த சம்பவம் கேள்விப்பட்டு வந்த ஊழியர்கள் அலெக்ஸாண்ட்ராவை சிங்கத்திடம் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். ஆனால் அந்த முயற்சி தொடர்ச்சியாக தோல்வியடைந்ததை அடுத்து, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

இதற்கிடையில் கழுத்து முறிந்து தமனி பகுதிகளில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால், அலெக்ஸாண்ட்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிங்கத்திடம் இருந்து தப்பிப்பதற்காக அலெக்ஸாண்ட்ரா நீண்ட நேரம் போராடியிருக்கிறார்.

அவருடைய கை மற்றும் சிறுநீரக பகுதியில் ஆழமான காயங்கள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் தலையை சிதைக்க சிங்கம் முயற்சித்துள்ளது. இதனால் அவருடைய கழுத்து முறிந்து இறந்திருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers