ஒரே வருடத்தில் 127 கிலோ எடையிலிருந்து 63 கிலோ எடை குறைத்தது எப்படி? 19 வயது இளம் பெண் சொன்ன ரகசியம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் 127 கிலோ எடையிலிருந்து இப்போது அதில் பாதியாக குறைந்து பார்ப்போரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் Ohio மாகாணத்தைச் சேர்ந்தவர் Michelle Farraj. 19 வயதான இவர் தன்னுடைய உடல் எடை(127கிலோ) அதிகரிப்பால் மருத்துவரை நாடியுள்ளார்.

அப்போது மருத்துவர்கள் Bariatric சிகிச்சை முறையை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். அதாவது Bariatric முறை என்றால் வயிற்றில் இருக்கும் இரைப்பை பகுதியின் ஒரு பகுதியை வெட்டி எடுத்துவிடுவார்கள்.

இதனால் அவர்களால் அதிக அளவில் உணவு எடுத்து கொள்ள முடியாது. அதன் பின் தொடர் சிகிச்சை, உணவு பழக்க முறை மாற்றத்தால் இப்போது தன்னுடைய உடல் எடையின் பாதி குறைந்து தற்போது 63 கிலோ எடை மட்டுமே உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் வீட்டில் இருக்கும் போது ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன்.

பாஸ்தா, அரிசி வகைகள், சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகள் என வயிற்றை காலியாகவே இருக்க விட மாட்டேன்.

இப்படி சென்று கொண்டிருந்த போதே, ஒரு நாள் என்னுடைய உடல் எடை அதிகரிப்பதை உணர்ந்தேன். நானே என் மீது கோபம் கொள்ள ஆர்ம்பித்தேன்.

கண்ணாடி முன்பு நின்று பார்த்தால் எனக்கே பிடிக்காது, இதனால் நான் சில தேர்வுகள் எழுதாமல் தோல்வியடைந்ததுண்டு.

அதன் பின் மருத்துவரை சந்தித்தேன் 6 நாட்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு விதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும், என்னுடைய உணவு முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

2017-ஆம் ஆண்டு இந்த முடிவை எடுத்த நான் செப்டம்பர் மாதம் 2018-ஆம் ஆண்டு நான் என்னுடைய உடல் எடை பாதி அளவிற்கு குறைந்ததை உணர்ந்து ஆச்சரியப்பட்டேன்.

இப்போது எல்லாம் முன்பு மாதிரி கிடையாது, காலையில் பருப்பு சாதம், மதியவேளையில் புரோட்டின் தன்மை கொண்ட சிக்கன் மற்றும் காய்கள், டின்னரில் அதே போன்று புரோடின் வகை காய்கள் மட்டுமே என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers