வெளிநாட்டில் குவிந்த கோடிக்கணக்கான நிதியுதவி: இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in அமெரிக்கா

இந்தியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக வீர மரணமடைந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு அமெரிக்காவில் இருந்து தனி ஒருவனாக இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 16 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

கடந்த 14-ஆம் திகதி தீவிரவாதிகளின் கொடூரமான தற்கொலைப் படை தாக்குதலால் ஒட்டு மொத்த இந்தியாவே சோகத்தில் உள்ளது.

உயிரிழந்த 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து உதவிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

அப்படி நிதியுதவி செய்ய விரும்புவோர் இந்திய அரசின் இணையதளமான பாரத் கே வீர் என்ற இணையதளத்தை பயன்படுத்தி உதவலாம்.

இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் விவேக் படேல் என்பவர் அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் வசித்து வருகிறார்.

இவர் அமெரிக்காவில் இருந்த படியே பாரத் கே வீர் மூலம் உதவ முயன்றுள்ளார். ஆனால் சர்வதேச டெபிட் / கிரெடிட் மூலம் இந்திய இணையதளத்தில் பணம் செலுத்தமுடியாத காரணத்தினால், அங்குள்ளவர்களிடம் நிதி திரட்டிய இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்துள்ளார்.

இதனால் 5 லட்சம் டொலர்கள் (இலங்கை மதிப்பில் 3,55,32,500 கோடி ரூபாய்) என்ற இலக்குடன் தன் நண்பர்கள் மற்றும் பேஸ்புக்கில் புல்வாமா தாக்குதல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அவர் நினைத்தது போன்றே 7 நாட்களில் 5 லட்சம் டொலர்கள் வரவில்லை அதை விட அதிகமாக 9.23 லட்சம் டொலர்கள்(இலங்கை மதிப்பில் 16,61,02,250 கோடி ரூபாய்) குவிந்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் 23 ஆயிரம் பேர் விவேக் படேலிடம் நிதி அளித்தனர். இவரின் முயற்சிக்கு பேஸ்புக் தனது ஆதரவை அளித்துள்ளது. இத்தொகை முழுவதும் முறையாக வீரர்களின் குடும்பத்திடம் சேர்க்கப்பட்டு, அதற்கான அப்டேட் வழங்கப்படும் என்று விவேக் படேல் தெரிவித்துள்ளார்.

விவேக் படேலின் இந்த முயற்சிக்கு சமூகவலைத்தளங்களிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்