மகன்களின் பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடியை தடவி கொடுமைப்படுத்திய தம்பதி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடியை தடவி கொடுமைப்படுத்திய காதலனையும் அதற்கு உறுதுணையாக இருந்த காதலியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தென் கரோலினா பகுதியை சேர்ந்த சப்ரினா எமெரிக் (25) என்பவருக்கு 5 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

சப்ரினா 2017ம் ஆண்டு தன்னுடைய 35 வயது காதலன் ராபர்ட் சலாடாவுடனான டேட்டிங்கை முடித்த பிறகு, மகன்களை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

அதில் ஒரு மகன் சோபாவில் சிறுநீர் கழித்ததற்கு தண்டனையாக, பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடியை தடவி ராபர்ட் துன்புறுத்தியுள்ளார்.

இதனை தடுக்காமல் சப்ரினாவும் வேடிக்கை பார்த்து அனுமதித்துள்ளார். மற்றொரு முறை 5 வயது மகனின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார்.

அதேபோல தாய் சப்ரினா, உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்ததற்காக மகன்களின் முகம், கண்களின் மிளகாய் பொடியை தடவியிருக்கிறார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்