வெளிநாட்டில் குடும்பத்துடன் கடை நடத்தி வந்த இந்தியர் சுட்டுக்கொலை! அனாதையான மனைவி, மகள்கள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் கடை நடத்தி வந்த இந்தியர் மர்ம நபரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 50 வயதான கோவர்தன் ரெட்டி, கடந்த 7 வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு தன்னுடைய மனைவி மற்றும் 12, 15 வயதுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பென்சகோல பகுதியில் ரெட்டி நடத்தி வந்த கடையினுள் மர்ம நபர்கள் இரண்டு பேர் புகுந்து திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ரெட்டி உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொரு நபர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தற்போது இரண்டு பேரை கைது செய்திருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அவருடைய உறவினர்கள், உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்