நான் செய்தது தவறு தான்..என்னை அனுமதியுங்கள் என்று கெஞ்சிய பெண்! முடியாது என தடைவிதித்த டிரம்ப்

Report Print Santhan in அமெரிக்கா

ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து பின் தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்புவதாக கூறிய பெண்ணை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சொந்த நாட்டிற்கு திரும்ப தடை விதித்துள்ளார்.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹூடா முதானா. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளார்.

இப்போது ஐ.எஸ் இயக்கத்திடமிருந்து மீண்டுள்ள இவர், நான் செய்தது தவறு தான் எனது மகனுட நான் என்னுடைய நாட்டிற்கு செல்ல விரும்புவதாக கூறியிருந்தார்.

ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு, அவரை மீண்டும் அமெரிக்காவிற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், நான் வெளியுறவுத் துறை அமைச்சரிடம், முதானாவை அமெரிக்காவிற்குள் மீண்டும் அனுமதிக்கக் கூடாது என்ற கருத்தை தெரிவித்துவிட்டேன், அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ கூறுகையில், முதானா அமெரிக்கக் குடிமகள் இல்லை. அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை. நாங்கள் அவரை அமெரிக்காவில் அனுமதிக்க முடியாது. அவரிடம் அதிகாரபூர்வமான பாஸ்போர்ட் கூட இல்லை என்று தெரிவித்தார்.

ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர், அவள் அமெரிக்காவில் பிறந்தவள். அவளிடம் முறையான பாஸ்போர்ட் இருக்கிறது. இருப்பினும் பெற்றோர் பிறந்த இடங்களை சுட்டிக் காட்டி அமெரிக்க அரசு தடை விதிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்