உங்களுக்கு இந்த ஆபத்து வரப்போகிறது! கனவில் முன்கூட்டியே பார்க்கலாம்- புல்லரிக்க வைக்கும் ஆய்வு

Report Print Balamanuvelan in அமெரிக்கா

உங்கள் வாழ்வில் எப்போதாவது நீண்டகால நண்பர் ஒருவரை சந்திப்பது போல் அல்லது சமையலறையில் திடீரென தீப்பிடிப்பதுபோல் கனவு கண்டு,அதேபோல் நடந்த அனுபவம் இருக்கிறதா?

பல நேரங்களில் அது தற்செயலாக நடந்தது என்று நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆனால் அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அப்படி ஒரு விடயம் உண்மையாகவே இருப்பதாகவும் அதற்கு அறிவியலில் ஆதாரம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

Dr Julia Mossbridgeஇன் கணவர் நுரையீரல் நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார்.

அவருக்கு சுவாசிக்க உதவுவதற்காக ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் அவர்கள் வீட்டில் எப்போதுமே இருக்கும்.

அப்படியிருக்கும் நிலையில் ஒரு நாள் தனது மகன் வெளியே செல்லும்போது அவனது பைக்கை பூட்டி விட்டு சென்றானா என்ற சந்தேகம் ஏற்பட்டு, அவனை பைக்கை சோதிக்க சொல்லியிருக்கிறார்.

வழக்கமாக கோபமே வராத Julia, அன்று கோபத்தில் தன் மகனைப் பார்த்து கத்தியிருக்கிறார்.

பின்னர் தானே சென்று பைக் பூட்டப்பட்டிருக்கிறதா என்று சோதித்திருக்கிறார். அது பூட்டப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது, ட்டின் பின்னால் வைக்கப்பட்டிருந்த மின்சார மீற்றர் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார் Julia.

அதற்கு மறுபுறம் உள்ள அவரது கணவரின் அறைக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும் நிலையில், Julia நெருப்பை கவனிக்காமல் விட்டிருந்தால் வீடு தீப்பிடித்திருக்கும், விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாகியிருக்கக்கூடும்.

தனக்கு தோன்றிய அந்த வித்தியாசமான உணர்வே நிகழவிருந்த பெரும் விபத்தை தவிர்க்க உதவியது என்று நம்புகிறார் Julia.

ஒரு சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம், தெரு முனையில் நாய் குரைக்கும் சத்தம் கேட்கிறது, அங்கே ஆபத்து இருக்கிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்கிறோம், அது போலத்தான் இதுவும்.

நமது மூளை சில ஆபத்துகளை நமக்கு முன்கூட்டியே அறிவிக்கிறது, சிலருக்கு இனம் புரியாத ஒரு பய உணர்வு மூலம், சிலருக்கு கனவுகள் மூலம் என்கிறார் Julia.

சுமார் 15 ஆண்டுகள் இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டதில் பலருக்கும் இதேபோல் நிகழ்ந்திருப்பதை அறிந்து கொண்டிருக்கிறார் அவர்.

வரிசையாக புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம், அழகான பூக்களின் படங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு கோரமான படம் நடுவில் வரும்போது நம் உடல் ஒரு பயத்தை சந்திக்கிறது, அதற்கேற்றாற்போல் ரியாக்ட் செய்கிறது.

இதேபோல்தான் நமது உடல் வரப்போகும் ஆபத்துகளை அறிந்து அதை பல்வேறு வழிகளில் நமக்கு தெரியப்படுத்த முயல்கிறது, அவைகளில் கனவுகளும் ஒரு வகை என்கிறார் Julia.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்