தாத்தா வயது முதியவரை காதல் திருமணம் செய்தது ஏன்? குழந்தை பெற முயன்று வரும் 19 வயது இளம்பெண் பேட்டி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 62 வயது முதியவரை 19 வயது இளம்பெண் காதலித்து திருமணம் செய்த நிலையில் குழந்தை பெற முயற்சித்து வருவதாக அப்பெண் கூறியுள்ளார்.

Arkansas மாகாணத்தை சேர்ந்தவர் சமந்தா சிம்சன் (19). கல்லூரி மாணவியான இவருக்கு ஜே.ஆர் (62) என்பவருடன் கடந்த 2017-ல் நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து தன்னை விட 43 வயது அதிகமானவர் என்பதையும் மீறி ஜே.ஆருடன் சமந்தா காதல் வயப்பட்டார்.

இந்த காதலுக்கு சமந்தாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதிர்ப்பை மீறி சமந்தாவும், ஜே.ஆரும் கடந்தாண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் வயதானவரை திருமணம் செய்து கொண்டதால் பலரும் சமந்தாவை மோசமாக விமர்சிப்பதாக அவர் வருத்தம் கொள்கிறார்.

சமந்தா கூறுகையில், தினமும் யாராவது போன் செய்தோ அல்லது நேரிலோ, எங்களை பற்றி மோசமாக பேசுகிறார்கள்.

நானும், என் கணவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். எங்களை விமர்சிப்பவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

என் கணவர் ஜே.ஆரை முதல்முறையாக பார்த்த போதே அவரின் தோற்றம் மற்றும் பண்புகள் என்னை ஈர்த்தது. இதுவே பின்னர் காதலாக மாறியது

என்னை அவர் மகாராணி போல கவனித்து கொள்கிறார். நாங்கள் குழந்தை பெற்று கொள்ள முயற்சி செய்து வருகிறோம்.

ஜே.ஆருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு குடும்பம் வேண்டும் என ஆசைப்படுகிறோம்.

அதனால் கர்ப்பமாக முயன்று வருகிறேன், எங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால் பின்னர் எங்களை யாரும் விமர்சிக்கவோ, தவறாக பேசவோ மாட்டார்கள் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்