கடும் குளிர்... மரணத்துடன் போராடும் ஆதரவற்ற மக்கள்: இளம்பெண்ணின் சிலிர்க்க வைக்கும் செயல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
116Shares

அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடும் குளிரால் மரணத்துடன் போராடும் ஆதரவற்ற அப்பாவி மக்களுக்கு தமது சொந்த பணத்தில் ஹொட்டல் அறை பதிவு செய்து வழங்கியுள்ளது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அமெரிக்காவில் polar vortex காரணமாக பெரும்பாலான நகரங்கள் கடும் குளிரில் அமிழ்ந்துள்ள நிலையில், இதுவரை 20-கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு மாணவர் அவரது கல்லூரி வளாகத்திலேயே உறைந்து பனிக்கட்டியாக மீட்கப்பட்ட சம்பவம் பலரையும் உலுக்கியது.

இந்த நிலையில் polar vortex காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிகாகோ நகரில் இளம்பெண் ஒருவர் சிலிர்க்க வைக்கும் செயலை முன்னெடுத்துள்ளார்.

அங்குள்ள 70 ஆதரவற்ற அப்பாவி மக்களை அழைத்துச் சென்று தமது சொந்த பணத்தில் 20 ஹொட்டல் அறைகளை பதிவு செய்து அவர்களை தங்க வைத்துள்ளார்.

இவர்கள் அனைவரும் சிகாகோ பலகலைக்கழகத்தின் அருகாமையில் இரவைக் கழிப்பவர்கள் என கூறப்படுகிறது.

குறித்த பகுதியில் தட்பவெப்பநிலை ஜீரோவுக்கும் குறைவாக பதிவாகி வரும் நிலையிலேயே Candice Payne என்ற இளம்பெண் குறித்த நெகிழ வைக்கும் செயலை முன்னெடுத்துள்ளார்.

தமது சேமிப்பால் ஆதரவற்ற மக்களுக்கு உதவுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், பொதுமக்களிடமும் ஆதரவும் நிதியும் திரட்டியுள்ளார் அவர்.

இதற்கு பெரும் ஆதரவு குவிந்த நிலையில், தற்போது 60 அறைகள் பதிவு செய்யப்பட்டு ஆதரவற்ற அப்பாவி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்