நிறைமாத கர்ப்பிணி தாயின் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட 3 வயது மகன்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் கர்ப்பிணி தாயின் முகத்தில் மூன்று வயது மகன் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்க்டன் பகுதியில் 27 வயது தாய் ஒருவர், தன்னுடைய காதலனுக்கு அருகே படுக்கையில் இருந்தபடியே டிவி பார்த்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென ஒரு சத்தம் கேட்டுள்ளது. திரும்பி பார்த்த பொழுது, கையில் ஒரு துப்பாக்கியுடன் அவருடைய 3 வயது மகன் நின்று கொண்டிருந்துள்ளான்.

இதனையடுத்து மீட்கப்பட்ட அந்த தாய் Harborview மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் தந்தை, உறவினர் ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கிவந்த துப்பாக்கியை வீட்டின் உயரமான இடத்தில் வைத்திருந்துள்ளார்.

சமீபத்தில் தான் அதனை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார். இதனை கவனித்த சிறுவன் தெரியாமல் எடுத்து சுட்டுள்ளான் என கூறியுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers