அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனமா? டிரம்பின் எச்சரிக்கை

Report Print Kabilan in அமெரிக்கா

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பணிக்கு நிதி தேவைக்காக அவசரநிலையை அறிவிக்க வேண்டிய சூழல் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைவதை தடுக்க சுவர் எழுப்ப வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஆனால், இதற்கு ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, நிதியாண்டுக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் பெற முடியாமல் அமெரிக்க நிர்வாகம் முடங்கியது. எனினும், சுவர் எழுப்ப நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்க முடியாது என ஜனநாயக கட்சியினர் அடங்கிய பிரதிநிதிகள் சபை தொடர்ந்து மறுத்து வருகிறது.

REUTERS/Leah Millis

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், ‘அமெரிக்க எல்லைப் பாதுகாப்புக்காக சுவர் எழுப்ப நான் முயற்சித்து வருகிறேன். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய நான் ஜனநாயகக் கட்சி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என் நேரத்தை வீணாக்குகிறது.

எல்லையில் சுவர் எழுப்ப இப்போது நிதி தேவை. ஜனநாயகக் கட்சி அமைச்சர்கள் இவ்வாறு தடை ஏற்படுத்தினால், நாட்டில் அவசரநிலையை கொண்டு வர வேண்டியது இருக்கும். ஆனால், அப்படியெல்லாம் நடக்காது என்று நான் நினைக்கிறேன். ஜனநாயகக் கட்சிக்கு எல்லைப் பாதுகாப்பு தேவையில்லை.

நான் அவர்களிடம் பேசிய வகையில் எல்லையில் சுவர் எழுப்புவது என்பது மரபை மீறியது, அது பயனளிக்காது என நம்புகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை நான் சுவர் எழுப்பும் விடயத்தில் உறுதியாக இருக்கிறேன்.

சுவர் எழுப்பும் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவேன். எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த 2,500 ராணுவ வீரர்களை அனுப்பி இருக்கிறேன். அவர்கள் அங்கிருக்கும் பொலிசாருக்கு உதவியாக இருப்பார்கள்.

ராணுவம் நமது நாட்டுக்கு மிகச்சிறந்த பணியை செய்து வருகிறது. குறிப்பாக எல்லையில் சுவர் எழுப்புதல், வேலை அமைத்தல் பணியையும் செய்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers