மாயமான 4 பிள்ளைகளின் தாயார்..கழுத்தில் கட்டப்பட்ட 50 கிலோ கல்லுடன் சடலமாக மீட்பு: அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நபர் ஒருவர் மனைவியின் கழுத்தில் 50 கிலோ கல்லக் கட்டி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் லேக் வொர்த் பகுதியில் குடியிருக்கும் எலிசபெத் ஆரேல்லானோ என்பவரே கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு உடன் பணி புரியும் நண்பர்களுடன் இரவு வெளியே சென்ற எலிசபெத் அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை.

இதனையடுத்து கணவரின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில் கணவர் ரூடி என்ற ரொடல்ஃபோவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதலில் தமது மனைவி மாயமானதில் தமக்கு தொடர்பு இல்லை என வாதிட்ட ரொடல்ஃபோவிடம், பொலிசார் கண்காணிப்பு கமெரா காட்சிகளை காண்பித்துள்ளனர்.

இதனையடுத்து ரொடல்ஃபோ நடந்த சம்பவத்தை பொலிசாரிடம் ஒப்புவித்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக 13 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள எலிசபெத் கோரியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரொடல்ஃபோ தமது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து சம்பவத்தன்று இரவு அவரை தாக்கி லேக் வொர்த் பாலத்தில் இருந்து கழுத்தில் 50 கிலோ கல்லைக் கட்டி தள்ளி விட்டுள்ளார்.

இதில் 4 பிள்ளைகளின் தாயாரான எலிசபெத் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், ரொடல்ஃபோவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers