குளிரில் உறையும் நகரம்: கவனத்தை ஈர்க்கும் வீடியோ

Report Print Arbin Arbin in அமெரிக்கா

கடுமையான குளிரில் அமெரிக்க நகரங்கள் பல நடுங்கிவரும் நிலையில் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வார காலம் யாரும் குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

துருவங்களில் இருக்கும் polar vertex கீழிறங்கி, அமெரிக்காவில் மையம்கொண்டுள்ளதுதான் இந்தத் திடீர் மாற்றத்துக்குக் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக பனியினால் அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

சிகாகோ பகுதிகளில், ரயில் தண்டவாளங்களில் நெருப்பு பற்றவைத்து, அதில் உறைந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றி ரயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகர மக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குளிரின் நிலைபற்றி அவ்வப்போது புகைப்படங்களாகவோ வீடியோவாகவோ வெளியிட்டுவருகின்றனர்.

இதனிடையே அமெரிக்காவின் லோவா நகரத்தைச் சேர்ந்த டெய்லோர் ஸ்கேலோன் என்ற பெண், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு தன் வீட்டு வாசலில் சில விநாடிகள் நிற்கிறார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் தலை முடியில் இருந்த நீர் உறைந்து முடி கம்பிபோல் நீட்டிக்கொண்டு நிற்கிறது.

இந்த வீடியோ பதிவிடப்பட்டு இரண்டு தினங்களில், சுமார் 2.7 மில்லியன் பேர் இதைப் பார்த்துள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்