காதலால் மிருகமாக மாறிய இளைஞர்: காதலி உட்பட 5 பேரை சுட்டுக்கொன்று வெறிச்செயல்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் தன்னுடைய பெற்றோர் உட்பட காதலியின் குடும்பத்தை சேர்ந்த 5 பேரை சுட்டுக்கொன்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த டகோடா திரிட் என்கிற 21 வயது இளைஞர், லிவிங்ஸ்டன் பாரிஷ் பகுதியில் உள்ள பில்லி எர்னஸ்ட் (43) என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு, பில்லி எர்னஸ்ட் அவருடைய மகன் டானர் (17) மற்றும் 20 வயது மகள் சம்மர் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளான்.

சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் கன்ஸால்ஸ் பகுதியில் இருந்து பொலிஸாருக்கு தகவல் வந்தது. அதில், டகோட்டாவின் பெற்றோர்களான எலிசபெத் திரியாட் (50) மற்றும் கீத் திரிட் ஆகிய இருவரும் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் கிடப்பதாக தெரியவந்தது.

அங்கு விரைந்த பொலிஸார் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிரமான விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அப்பொழுது, வார்சா பகுதியை சேர்ந்த டகோடா திரிட்டின் பாட்டி, பேரன் வீட்டிற்கு வந்திருபப்தாக அஞ்சி ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார்.

பில்லி எர்னஸ்ட் சகோதரி கிறிஸ்டல் டீஜெங், செய்தியாளர்களை சந்தித்தபோது, டகோடா திரிட் மற்றும் சம்மர் எர்னெஸ்ட் சமீபத்தில் தான் அவர்களுடைய டேட்டிங்கை துவங்கினார்கள் என நினைக்கிறேன்.

என் குடும்பம் கடந்த வாரம் அவரை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தது. ஆனால் அவர் நல்லவர் போல எங்களுடைய குடும்பத்திற்கு தெரியவில்லை. என் அம்மா ஒருவரின் குணத்தை எளிதில் அடையாளம் கண்டு கொள்வார். அந்த வகையில், டகோடா திரிட் நல்லவர் இல்லை என என்னுடைய அம்மா கூறியதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்