தாயை கொலை செய்ய தந்தைக்கு உதவிய மகளுக்கு 15ஆண்டுகள் சிறை தண்டனை

Report Print Abisha in அமெரிக்கா

நியூயார்கில், தாயை கொலை செய்ய தந்தைக்கு உதவி செய்து தற்கொலை என்று நாடகமாடிய பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்கில் லாயிட் நியூரடார், மைக்கேல் தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக லாயிட் நியூரடார் மைக்கேலை கடுமையாக தாக்கும் வழக்கம் கொண்டுள்ளார்.

தாக்குதல் தொடர்ந்ததால் மைக்கேல் விவாகரத்து பெற்று தனியாக தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஐந்து வருடங்கள் கடைசி மகள் மட்டும் லாயிட்ன் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பல போராட்டங்களுக்கு பின் அந்த மகளும் மிக்கேலுடன் இணைந்துள்ளாள்.

தொடர்ந்து பல நாட்களாக லாயிட் தனது மற்றொரு மகளான Karrie-யிடம் தாயை கொலை செய்ய வேண்டும் என்று கூறி வந்துள்ளதாக தெரிகிறது. இதற்காக இருவரும் இணைந்து பல திட்டங்கள் தீட்டி உள்ளனர்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு அகஸ்ட் 28 திகதி லாயிட் தனது முன்னாள் மனைவியை வீட்டின் முதல் மாடியில் வைத்து கொலை செய்துள்ளார். அந்நேரம் Karrie தனது சிறிய தங்கையை திசைதிருப்ப செய்துள்ளாள்.

உடலை கைப்பற்றிய பொலிசார் முதலில் தற்கொலைதான் என்று நினைத்தனர். இந்நிலையில் லாயிட் தொடர்ந்து மாறுபட்ட விதத்தில் தகவல்கள் கூறியதை அடுத்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மைக்கேலின் உடலில் இருந்த கைரேகைள் எடுத்து ஆராய்ந்ததில் அது லாயிடியின் கைரேகை என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொலிசார் கைது செய்து விசாரிக்கையில் மகள் உதவியுடன் அவர் கொலை செய்துள்ளார் என்றும், பல வருடங்களாக திட்டமிட்டு கொலை செய்ததும் வெளியானது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததில் Karrie தனது தாயை கொலை செய்ய உதவியதால் அவருக்கு 15ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்