காதலனை துண்டு துண்டாக வெட்டி உடலை மறைத்து வைத்திருந்த காதலி! அதிர்ச்சியில் உறைந்த பொலிசார்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் காதலனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடலை காரில் மறைத்து வைத்திருந்ததைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தைச் சேர்ந்தவர் Penny Pospisil(47). இவரும் Anthony Mitchell(55) என்பவரும் திருமணம் செய்யாமல் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் Penny Pospisil-ஐ பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், புளோரிட மாகாணத்தின் மொபைல் ஹோம் நிறுத்தம் ஒன்றில் Penny Pospisil-க்கு சொந்தமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

வெகுநாட்களாக அந்த வாகனத்திற்கு Penny Pospisil உரிய வாடகை செலுத்தாத காரணத்தினால், இது குறித்து பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் பொலிசார் அவரின் காரை சோதித்து பார்த்த போது, அதில் Anthony Mitchell-ல் உடல் பாகங்கள் துண்டு துண்டாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின்னரே பொலிசார் அவரை பிடித்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Penny Pospisil அவரை இப்படி கொடூரமாக கொலை செய்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும், இதைப் பற்றி விவரங்கள் அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்