11 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை! விரைவில் பிறக்கப்போகும் குழந்தை: அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 11 வயது மகளை 61 வயதான தந்தை கர்ப்பமாக்கிய நிலையில், சில வாரங்களில் சிறுமி குழந்தை பெற்றெடுக்கவுள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரை சேர்ந்தவர் மைக் ஹெர்னான்ஸ். இவர் தனது மனைவி, 11 வயதான மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் 11 வயது சிறுமியின் வயிறு வீங்க ஆரம்பித்தது.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைகேட்டு சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

அப்போது தான் சிறுமியின் தந்தை மைக் தனது மகளை அடிக்கடி பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமானது தெரியவந்தது.

சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை கலைக்க முடியாத நிலையில் சில வாரங்களில் அவர் குழந்தை பெற்றெடுக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த கொடுஞ்செயலை செய்த சிறுமியின் தந்தை மைக்கை பொலிசார் புகாரின் பேரில் கைது செய்தார்கள்.

அவர் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். மைக் அடுத்தமாதம் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில், அவர் துப்பாக்கி வைத்திருக்கக்கூடாது எனவும், சிறார்களிடம் பழகக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்