கன்னித்தன்மை இழக்காததால் பெண்கள் மீது ஆத்திரம்: சதித்திட்டம் தீட்டிய இளைஞர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் கன்னித்தன்மையை இழக்காத ஆத்திரத்தில், பெண்கள் அணிவகுப்பின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் உட்டாஹ் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் க்ளேரி என்கிற 27 வயதான நபர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், எனக்கு காதலி வேண்டும் என நான் விரும்பினேன். பணத்திற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அல்ல.

நான் விரும்பியதெல்லாம் என்னை நேசிக்க ஒரு பெண். ஆனால் இதுவரை என்னை கவனிக்க ஒரு பெண் கூட இல்லை.

எனக்கு இப்போது 27 வயதாகிறது. ஆனால் இதுவரை காதலி கிடைக்கவில்லை. நான் இன்னும் கன்னித்தன்மையை இழக்காத பையனாக இருக்கிறேன்.

இதனால் தான் நான் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறேன். பெண்கள் அதிகமாக கூடியிருக்கும் அணிவகுப்பில் துப்பாக்கி சூடு நடத்த உள்ளேன். அதன் பிறகு என்னை நானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்வேன்.

அப்போது அனைத்து பெண்களின் கவனமும் என் பக்கம் திரும்பும் என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவானது பொலிசாரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, கிறிஸ்டோபரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதில், காதலி கிடைக்காத வருத்தத்தில் தான் அப்படி பதிவிட்டேன். மற்றபடி எந்த திட்டமும் இல்லை என கூறியுள்ளான்.

அதேபோன்று மற்றொரு பதிவில், இந்த உலகில் ஒரு ஆண் தற்கொலை செய்துகொள்ள தயாராக இருப்பதை தவிர பெரிய ஆபத்து ஒன்றுமில்லை என குறிப்பிட்டிருந்துள்ளார்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ப்ரோவோ பகுதியில் நடக்கவிருந்த பெண்கள் அணிவகுப்பில் தான் கிறிஸ்டோபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்க வேண்டும் என சந்தேகம் தெரிவித்ததோடு, அவருடைய வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers