முதல் முறையாக வீடியோவில் சிக்கிய ஆவி: அமெரிக்க சிறையில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் இருக்கும் பாழடைந்த சிறை ஒன்றில் ஆவிகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து ஆவிகளை ஆராய்ச்சி செய்பவர்களான David Scott மற்றும் John Stephens என்னும் இருவரும் தங்கள் கருவிகள் உதவியுடன் அங்கு சென்றனர்.

ஒருவர் அங்கு ஒலிக்கும் குரல்களை பதிவு செய்ய, மற்றவர் அரியவகை கெமரா ஒன்றின் உதவியால் அங்கு நடப்பவற்றை படம் பிடிக்கிறார்.

பின்னர் தாங்கள் பதிவு செய்தவற்றை போட்டு பார்த்தபோது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

எங்களுடன் இந்த அறையில் இருப்பது யார், யார் என்னை தொட்டது என்று David கேட்க, ஹாய், வெளியே போ என்று யாரோ சொல்வது கேட்கிறது.

ஆவிகளை படம் பிடிக்கும் கெமராவில் பார்க்கும்போது, ஒரு சிறு பிள்ளை உயரத்திலிருக்கும் அந்த ஆவி, நேரடியாக Davidஇன் கெமராவில் பேசுவது பதிவாகியுள்ளது.

மீண்டும் அவர் யார் இந்த அறையில் இருப்பது, உன் பெயர் என்ன என்று கேட்க, மீண்டும் அந்த குரல் ஹாய் என்கிறது.

Davidக்கு மிக அருகில் நிற்கும் அந்த ஆவி, அவரது கேள்விக்கு பதிலளித்ததும், மீண்டும் அவரை ஒரு சுற்று சுற்றி, பின் அவருக்கு பின்னாலேயே வந்து நிற்பதை வீடியோவில் பார்த்த David அதிர்ந்து போனாராம்.

கெமராவில் ஆவி பதிவாகியுள்ளது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers