அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதிக்கும் தமிழ் பெண்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Kabilan in அமெரிக்கா

அடுத்த ஆண்டு நடக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கலிபோர்னியா மாகாண செனட் சபையின் உறுப்பினராக இருப்பவர் கமலா ஹாரிஸ். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது தாய் ஷியாமளா கோபாலன், தந்தை டொனால்டு ஹாரிஸ் ஆவர்.

வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கமலா ஹாரிஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். இதன் காரணமாக அமெரிக்க இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரிடம் இவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘அமெரிக்காவை காப்பதே என் கடமை. அதனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகிறேன். மக்களுக்காக கமலா ஹாரிஸ் என்ற முழக்கத்தை வைத்து தேர்தலை எதிர்கொள்ள போகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ஹெச்1பி விசா கட்டுப்பாடு, மெக்சிகோ எல்லைச் சுவர் பிரச்சனை போன்றவற்றால் டொனால்டு டிரம்ப் மக்களிடம் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், கமலா ஹாரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆனால், கமலா ஹாரிஸுக்கு போட்டியாக நியூயார்க் செனட் உறுப்பினர் கிர்ஸ்டன், முன்னாள் கேபினட் உறுப்பினர் ஜூலியன் கேஸ்ட்ரோ போன்றவர்கள் ஏற்கனவே களத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Mark Wilson/Getty Images

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers