விமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணி: அதிர்ந்து போன பணிப்பெண்

Report Print Abisha in அமெரிக்கா

EVA air – என்ற விமானத்தில் பயணித்த மாற்றுதிறனாளி பயணி ஒருவருக்கு கழிப்பிடத்தில் உதவிய விமான பணிபெண்ணிடம் அந்தரங்கத்தை காண்பித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

EVA air விமானமானது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் இருந்து வடக்கு தாய்வானுக்கு சென்றுள்ளது. அந்த விமானத்தில் பணிக்காக பெண்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் மாற்று திறனாளி பயணி ஒருவர் தனக்கு கழிப்பிடம் செல்ல வேண்டும் என்று ஆண் உதவியாளர்களை கோரியுள்ளார். ஆனால் அவருக்கு உதவ ஆண் பணியார்கள் இல்லாததால் பெண் பணியாளரே உதவ முன்வந்துள்ளார்.

அவர்கள் அந்த பயணியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி செல்ல உதவது மட்டுமே என்று நினைத்து கொண்டுள்ளார்.

ஆனால் கழிவறையின் உள்ளே சென்று அவரது பேன்ட் மற்றும் உள்ளடையை கழற்ற அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அவரும் அவருக்கு உதவி உள்ளார்.

இந்நிலையில் சிறுநீர் கழித்துவிட்டு தனது அந்தரங்க பகுதியை வெளியில் காட்டியவாறு பெண்ணை அழைத்துள்ளார்.

அதிர்ந்து போன பணி பெண் அவரை ஆடையை மூடி கொள்ளும்படி கேட்டு கொண்டுள்ளார். ஆனால் அவர் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

இதை அடுத்து அந்த பணிபெண் அவருக்கான அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.

மேலும் EVA air விமான பணியாளர்கள் இதுபோன்ற மாற்று திறனாளிகளுக்கு உதவ ஆண் பணியாளர்கள் அமைக்கப்பட்ட வேண்டு என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் ஏற்கனவே நடந்துள்ளதாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers